எரிபொருள் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

By Mayuri Sep 01, 2024 10:39 AM GMT
Mayuri

Mayuri

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டி சங்கங்களுக்கு விலையைக் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தொழில்ரீதியான முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணக் கட்டணம்

அதன்படி, தங்களது பயணக் கட்டணங்களைத் திருத்தியமைக்கும் அளவுக்கு எரிபொருள் விலை குறைக்கப்படவில்லையென அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல் | Bus Fair In Sri Lanka

அதேநேரம், பேருந்து பயணக் கட்டணத்தைக் குறைக்க முடியாது எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW