கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்து

Sri Lanka Police Colombo Kandy
By Mayuri Jul 01, 2024 06:09 AM GMT

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வெவல்தெனிய பிரதேசத்தில் இன்று (01.07.2024) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தொன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வறக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

GalleryGallery