2019இல் வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்ட நிதி: ரஞ்சித் சியம்பலாபிட்டிய நினைவுபடுத்தும் விடயம்

Ranjith Siyambalapitiya vehicle imports sri lanka Import
By Mayuri Jul 30, 2024 12:42 PM GMT
Mayuri

Mayuri

2019ஆம் ஆண்டின் மொத்த வருமானத்தில் 16 சதவீதம் அல்லது 130 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயற்பாட்டாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக சுங்க திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 63.8 சதவீதம் குறைந்துள்ளது.

வரவு செலவுத் திட்ட இடைவெளி

2023ஆம் ஆண்டு மே 31ஆம் திகதிக்கு இடையில் 1,014 பில்லியன் ரூபா வரவுசெலவுத் திட்ட இடைவெளி காணப்பட்டது. எனினும் இந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வரவு செலவுத் திட்ட இடைவெளி 366 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

2019இல் வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்ட நிதி: ரஞ்சித் சியம்பலாபிட்டிய நினைவுபடுத்தும் விடயம் | Budget Deficit

முறையான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி நகர்ந்ததன் விளைவாகவே இந்த நிலையை அடைய முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1,537 பில்லியன் ரூபா வருமான இலக்கில் 708 பில்லியன் ரூபா வருமானத்தை ஏற்கனவே பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தலேயே சுங்கத்துறையினர் அந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து வருவது விசேட அம்சமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW