கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பிரித்தானியப் பிரஜை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 43 கோடி 64 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (26) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனைக்குட்படுத்திய போது பயணப் பொதிகளிலிருந்து 43 கிலோ 648 கிராம் கஞ்சா கிரீன் செனலில் இருந்த அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிராமிய நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் அமைச்சின் புதிய செயலாளராக ஏ.எம்.பி.எம்.பீ.அத்தபத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |