கந்தளாய் பகுதியில் ஏற்பட்டுள்ள விபத்து : அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Sri Lankan Peoples Accident
By Rakshana MA Jan 06, 2025 11:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

கந்தளாய் பிரதேசத்தில் 86ஆவது மைல் கல் எனும் இடத்தில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று(06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும், இதன்போது பலத்த காயங்களுக்கு ஆளாகிய நிலையில் பவுசர் சாரதியும், அவரது உதவியாளரும் கந்தளாய் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை

மேலதிக விசாரணை 

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த சீமந்தை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, முன்னால் வேகமாக வந்த காரோன்றுக்கு விலகி இடம்கொடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பகுதியில் ஏற்பட்டுள்ள விபத்து : அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர் | Bowser Umbrella Tipped Over In Kandalai

இந்த நிலையில், காயமடைந்த இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறவுள்ள இலங்கையர்

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறவுள்ள இலங்கையர்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள அமெரிக்கா!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW