மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lankan Peoples Ceylon Electricity Board Money Nalinda Jayatissa
By Laksi Jan 03, 2025 03:30 PM GMT
Laksi

Laksi

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய ஊழியர் சங்கத்தின் இலங்கை மின்சார சபை கிளை வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ ஜயக்கொடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

ஊக்குவிப்பு கொடுப்பனவு

இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Bonus For Electricity Board Employees

அதன் பின்னர் ரஞ்சன் ஜெயலால் தமது கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கினால் அடுத்த ஆண்டு வரவிருக்கும் வறட்சி காலத்தில் மின் விநியோகத் தடையை சந்திக்க நேரிடும் தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW