வெள்ளவத்தையில் வெடிக்குண்டு மீட்பு

Sri Lanka Police Colombo
By Chandramathi Jun 12, 2023 12:33 PM GMT
Chandramathi

Chandramathi

கொழும்பு கிருலப்பனை பகுதியில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கைக்குண்டு இன்று(12.06.2023) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனை அவென்யூ வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சீமெந்து பானை ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.