இரத்த மாற்ற செயற்பாட்டின் போது அவதானம் செலுத்தப்படும் விடயம்! லக்ஷ்மன் எதிரிசிங்க விளக்கம்
இரத்த மாற்ற செயற்பாட்டின் போது இரத்தத்தில் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகள் இல்லை என்பது உயர்தரத்திலான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உயர் தொழிநுட்பத்துடன் பரிசோதனைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மலேரியா, வயிற்றுப்போக்கு, கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) பி, கல்லீரல் அழற்சி சி மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் போன்ற ஐந்து நோய்களினால் ஏற்படக் கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக அதிவிசேட உயர் தொழிநுட்பத்துடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குருதிக் கொடையாளரின் நடத்தை முறை மற்றும் அவரிடம் நோய்த்தாக்கங்களின் அவதானம் உள்ளதா என விசேட ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |