ரமழான் பெருநாள் கொண்டாட்டத்திற்காக தென்கிழக்கு பல்கலைக்கழக சங்கத்தால் வழங்கப்பட்ட பொதி
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புனித ரமழானை முன்னிட்டு மூன்று வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.
அந்த வரிசையில் மூன்றாவது திட்டமாக முஸ்லிம்களது நோன்புப் பெருநாள் உட்பட தமிழ் சிங்கள ஊழியர்கள் தாங்களது பெருநாள் தினத்தில் பிரியாணி உண்டு பெருநாட்களை மகிழ்வுடன் கழிக்கும் விதத்தில் பிரியாணி அரிசி பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று 27 ஆம் திகதி ஊழியர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அன்பளிப்பு
இதன் போது சங்கத்தின் தலைவர் முனாஸ் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியோருக்கும் விஷேடமாக உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நிகழ்வின்போது ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஈச்சம்பழம் மற்றும் இறைச்சி ஆகியவையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
