பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 2025 ஜனவரி முதல் இலத்திரனியல் தட்டுகள் (Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் கடவுச்சீட்டுகளை வழங்க இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான முன்பதிவு செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பம்
கொழும்பிற்கு வெளியே வசிக்கும் மக்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்களையும் குடிவரவுத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக சுமார் 5 மில்லியன் பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரம் கடந்த ஜனவரியில் கோரப்பட்டது. எனினும் சில மேம்படுத்தல்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |