கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி - 9 பேர் படுகாயம்

By Vethu Jun 12, 2024 12:00 PM GMT

பதுளை பிபில - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் வாகம பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.