இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் அல்ல : நெதன்யாகு கண்டனம்
இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அந்த நாடே முடிவு செய்யும் என்றும், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் (புரோடக்டரேட்) அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுள்ளார்.
காசாவில் நடைமுறையில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்தம் குறித்து அந்த நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் விவாதிப்பதற்கு முன்னதாக, இந்தக் கடுமையான கருத்தை நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.
அமைதிக்கான பாதையில் பெரும் தடைகள் உள்ளன
காசாவில் நிறுத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் சா்வதேச பாதுகாப்பு படையினா், அந்தப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் திறனைக் குறைக்கலாம் என்று இஸ்ரேலில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருடனான சந்திப்புக்கு முன் பத்திரிகையாளா்களிடம் பேசிய வான்ஸ், "அமைதிக்கான பாதையில் பெரும் தடைகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டார்.

அத்துடன், காசாவில் சா்வதேச பாதுகாப்பு படையை அமைப்பது மற்றும் அப்பகுதியை யார் ஆளுவது என்பது குறித்து நிச்சயமின்மை நீடிக்கிறது. சர்வதேச படையில் எந்தெந்த நாடுகள் பங்கேற்கும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
துருக்கி மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் படைகளை வழங்குவதாக எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், பிரிட்டனும், அமைதி ஒப்பந்த நடைமுறைப்படுத்தலை கண்காணிக்க உதவுவதற்காக இஸ்ரேலுக்கு ஒரு சிறிய இராணுவ அதிகாரிகள் குழுவை அனுப்பியுள்ளது." என்று தெரிவித்தார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |