கனடாவை தொடர்ந்து நெதன்யாகுவை கைது செய்ய தயாராக இருக்கும் அடுத்த நாடுகள்

Benjamin Netanyahu Israel-Hamas War Arrest
By Faarika Faizal Oct 23, 2025 08:46 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமரை கைது செய்யும் சர்வதேச பிடியாணையை செயற்படுத்த தயாராக இருப்பதாக பல நாடுகளும் அறிவித்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 2 வருட போரில் காசாவை தாக்கிய இஸ்ரேல் 67ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது.

இது காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை என சர்வதேச நாடுகள் பல தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர். 

இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைதாவார் : கனடா அதிரடி

இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைதாவார் : கனடா அதிரடி

நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையில் உள்ளது  

இந்நிலையில், நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கனடாவை தொடர்ந்து நெதன்யாகுவை கைது செய்ய தயாராக இருக்கும் அடுத்த நாடுகள் | Arrest Warrant Against Netanyahu

அத்துடன், டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் மற்றும் காசா போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையிலே உள்ளது.

இதனால் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரை கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்திருந்தார்.

அத்துடன் பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான சர்வதேச பிடியாணையை செயல்படுத்துவோம் என கூறியுள்ளதால், இஸ்ரேல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 


You May Like This Video...

யஹ்யா சின்வாரின் உடலை எரித்து விடுமாறு இஸ்ரேலிய அமைச்சர் பரிந்துரை

யஹ்யா சின்வாரின் உடலை எரித்து விடுமாறு இஸ்ரேலிய அமைச்சர் பரிந்துரை

பலஸ்தீனில் பிறந்த குழந்தைக்கு "சிங்கப்பூர்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பலஸ்தீனில் பிறந்த குழந்தைக்கு "சிங்கப்பூர்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW