யஹ்யா சின்வாரின் உடலை எரித்து விடுமாறு இஸ்ரேலிய அமைச்சர் பரிந்துரை
இஸ்ரேலிய அமைச்சர் மிரி ரெகேவ், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை எரிக்க பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திலே அவர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் யஹ்யா சின்வாரி கொல்லப்பட்டார். அத்தோடு அவரின் உடலையும் இஸ்ரேல் கைப்பற்றி வைத்துக்கொண்டது.
யஹ்யா சின்வாரின் உடலை எரிக்க பரிந்துரை
அந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையின் போது யஹ்யா சின்வாரின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஹமாஸ் கேட்டபோதும் அதனை இஸ்ரேல் மறுத்துவிட்டது.
இந்நிலையில், இஸ்ரேலிய அமைச்சர் யஹ்யா சின்வாரின் உடலை எரிக்க பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன், சர்வதேச சட்டங்களின்படி, யுத்தத்தில் கைப்பற்றப்படும் உடல்கள் உரிய மரியாதையுடன், கையளிக்கப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |