நபி(ஸல்) தடை செய்த 3 விஷயங்கள்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்களை மிகத்தெளிவாகவே தடைசெய்திருக்கின்றார்கள்.
அல்லாஹ் அல்லாதவற்றிற்குத் தலைவணங்குவதை தடைசெய்தார்கள். யாரும் யாருக்கும் சஜ்தா- தலைவணங்கத் தேவையில்லை.
மேலும் முஆத் பின ஜபல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சஜ்தா செய்ய முற்பட்ட போது அவர்கள் தடுத்துவிட்டார்கள்.
இதை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்யலாம் என கூறுபவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரானவர் ஆவார்.
ஏனென்றால் தலைவணங்குவது அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வழிகளுள் மிகுந்த உச்சக்கட்டத்தில் உள்ளதாகும்.
அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது? ”அல்லாஹ்வின் தூதரே எங்களுள் ஒருவர் மற்று ஒருவருக்கு குனியலாமா?” என வினவினோம். அதற்கு அவர்கள் ”கூடாது“ என்றுரைத்தார்கள்.
”எங்களுள் ஒருவர் மற்றொருவரை அணைத்துக் கொள்ளலாமா?” என வினவினோம், அதற்கு அவர்கள் ”கூடாது, எனினும் கை குலுக்கிக்கொள்ளுங்கள்” என்றுரைத்தார்கள்.
ஒருவர் அமர்ந்திருக்க மற்றவருக்காக எழுந்து நிற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள். இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
அரபியர்கள் அல்லாதவர்கள் இவ்வாறு ஒருவருக்கொருவர் எழுந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இது தொழுகையில்கூடத் தடுக்கப்பட்டுள்ளது.
ஆம் ஏதேனும் இயலாமை காரணமாக இமாம் அமர்ந்து தொழவைத்தால் அவரைப் பின்பற்றித் தொழுவோரும் அமர்ந்து தான் தொழ வேண்டும். இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அப்படியிருக்கும் போது அல்லாஹ் அல்லாத பிறருக்கு மரியாதை செலுத்துவதற்காகவோ அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் முகமாகவோ எப்படி எழுந்து நிற்க முடியும்?
சுருக்கமாக வழிகெட்ட அறிவிலிகள், அல்லாஹ்விற்கு மட்டும் வெளிப்படுத்த வேண்டிய அடிமைத்தனத்தை வீழ்த்திவிட்டார்கள்.
அதில் படைப்பினங்களுக்கு மரியாதை செய்வதையும் இணைத்துவிட்டார்கள். அல்லாஹ் அல்லாதவருக்கு தலைவணங்குவதையும், தலைகுனிவதையும் தொழுகையில் நிற்பதை போன்று எழுந்து நிற்பதையும் பழக்கமாக்கி கொண்டார்கள்.
அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்வதையும், அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்வதையும், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுவதையும், அல்லாஹ் அல்லாதவருக்காக தலைமுடியை மழித்துக் கொள்வதையும் அல்லாஹ்வின் வீடல்லாததைச் சுற்றி வருவதையும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
மேலும் அல்லாஹ் அல்லாததை நேசிப்பதையும் அஞ்சுவதையும் வழிப்பட்டு பணிவதையும் அருளை எதிர்பார்ப்பதையும் பழக்கமாக்கி கொண்டுள்ளார்கள்.
மேலும் படைப்பினங்களை வணங்குவதையும் அல்லாஹ்வை வணங்குவதையும் சமமாக்கிவிட்டார்கள். இவர்கள் தான் இறைத்தூதர்கள் அழைத்த அழைப்புக்கு எதிரானவர்கள். இவர்கள் தம் இறைவனைவிட்டுத்திரும்பியவர்கள்.
இவர்கள் நரகத்தில் கிடந்து, தாம் வணங்கிய கடவுளோடு வாதிட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பகிரங்கமாக வழிகேட்டில்தான் இருந்தோம்(என்றும், தங்கள் தெய்வங்களை நோக்கி) உங்களை நாங்கள் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம் என்றும் கூறுவார்கள்.
மேலும் அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களுள் பலர் இருக்கின்றனர்.
எனினும், இறைநம்பிக்கையாளர்கள்(இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள். அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |