வங்கி அட்டையின் இரகசிய தகவல்களை பகிரும் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka
By Mayuri Jul 19, 2024 12:53 PM GMT
Mayuri

Mayuri

இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் தெளிவற்றுள்ளதாக Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க நேரிடுகிறது.

நிதி மோசடிகளுக்கான காரணம்

நிதி மோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வங்கிக் கணக்குத் தகவல்களை மிக இலகுவாக வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளனர்.

வங்கி அட்டையின் இரகசிய தகவல்களை பகிரும் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Bank Card Credit Card Users Sri Lanka

இதன் காரணமாகவே நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வங்கி கணக்கு தகவல் மற்றும் இரகசிய எண்களை கூட பரிமாறி நிதி மோசடிக்குள்ளானவர்கள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW