பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப் பதிவு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 19ஆம் திகதி டாக்காவின் முகமதுபூர் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 6 பேர் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதல் வழக்கு
இந்தநிலையில், ஷேக் ஹசீனா பதவியை விட்டு விலகி நாட்டை விட்டுவெளியேறியப் பிறகு அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலர், முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் ஐ.ஜி.பி உட்பட உயரதிகாரிகள் பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |