பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்

Bangladesh World
By Fathima Dec 30, 2025 04:54 AM GMT
Fathima

Fathima

பங்களாதேசின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா தனது 80 வயதில் காலமானார்.

இவர் இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று நோய்

அவருக்கு சிறப்பு வைத்தியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார் | Bangladesh First Female Pm Khaleda Zia Dies

ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று(29) தெரிவித்து இருந்தனர்.

அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று(30) காலை 6 மணிக்கு காலமானதாக என்று அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.