பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை! பந்துல
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் இயக்க திட்டம்
பல வருடங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருந்த ஹோமாகம பிரதேசத்தை அறிவு மையமாக நகராக மாற்றுவதற்கு இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும் அதில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலத்தில் பிஎச்டி முடித்து திரைப்படமொன்று இயக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |