சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்டுள்ளார்.
1980 ஆம் ஆண்டு 26 ஆம் எண் உணவுச் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ், உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகள்
அதன்படி, 2022 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகள் மற்றும் 2022 இல் வெளியிட்ட வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டிருந்த விதிமுறைகள் என்பன தற்போது புதிய வர்த்தமானியின் ஊடாக திருத்தப்பட்டுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி (Hansaka Wijemuni) ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |