துஷித ஹல்லொலுவவுக்கு பிணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னார் பணிப்பாளர் துஷித ஹல்லொலுவவை பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது,
குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், சந்தேகநபரை தலா ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக நீதவான்
அத்துடன் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.