இம்ரான் கானுக்கு பிணை

Pakistan Imran Khan
By Fathima Jun 09, 2023 08:12 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இம்ரான் கானுக்கு பிணை | Bail For Imran Khan

இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் அண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 14 நாள்களுக்கு இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.