200 பேரிடம் வாக்குமூலம் - நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பின்னணி முன்னாள் தலைவர்களா..!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று(14.07.2026) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில், இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறைச்சாலை மோதல் வதந்திகள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து 40ஆயிரம் சிறைக் கைதிகள் இலங்கையில் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட சிறைக் கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.