180,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Fathima
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.