நீர்கொழும்பில் கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி

Negombo Crime Gun Shooting
By Laksi Feb 21, 2025 12:32 PM GMT
Laksi

Laksi

நீர்கொழும்பு பகுதியில் கணேமுல்ல சஞ்சீவவின் சீடர் ஒருவரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடை பொல பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையின் உரிமையாளர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

துப்பாக்கிச் சூடு

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மிரிஸ் அந்தோணி என்பவரின் மூத்த மகனை குறிவைத்து தாக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

நீர்கொழும்பில் கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி | Attempt To Kill Shop Owner In Negombo

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதும் துப்பாக்கி இயங்கவில்லை என்ற நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது.

கணேமுல்ல சஞ்சீவவின், கீழுள்ள கமாண்டோ சலிந்த என்ற நபர், குறித்த வர்த்தக நிலையத்தில் கப்பம் கோரி பணம் கேட்டதாகவும், பணம் செலுத்தப்படாத நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW