அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு முக்கிய முன்மொழிவுகள் ஆராயப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.





