தாக்குதல்கள் மூலம் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது: மணிவண்ணன் திட்டவட்டம்
எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வி. மணிவண்ணன்(V. Manivannan) தெரிவித்துள்ளார்.
மேலும் எமது கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தலாகும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மூவர் வைத்தியசாலையில்
மூன்று பெண்கள் உள்ளிட்ட 08 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அதில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சமாதானமான அமைதியான தேர்தலுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாக பார்க்கின்றோம்.
வன்முறை கும்பல் ஒன்றினால் பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர் . அதற்கு துரதிஷ்ட வசமாக எந்த பெண்கள் அமைப்புக்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதேவேளை சட்டத்தையும் அமைதியையும் விரும்புகின்றவர்களும், எந்தவொரு அரசியல் கட்சிகளும் இந்த எம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |