கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல்!
By Fathima
கம்பஹா பகுதியில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறுவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில்...
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், இவர்களை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் 29 ஆம் திகதி சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.