கோட்டாபயவை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – அத்துரலிய ரத்தன தேரர் எம்.பி

Sri Lanka Cabinet
By Nafeel Apr 26, 2023 07:38 AM GMT
Nafeel

Nafeel

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரலாற்றில் அவருக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது” –

என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கோட்டாபய ராஜபக்சவின் தான்தோன்றித்தனம் காரணமாகவே நாடு இந்த நிலைக்குச் சென்றது. கோட்டாபய போன்ற பலவீனமான ஒருவரை ஆட்சிக்குக் கொண்டு வந்தது பிழை என்பதை இப்போது உணர்கின்றேன்.

இயற்கை விவசாய கருத்திட்டத்தைக் கொண்டு வந்தது நான்தான். ஆனால், அதை 24 மணி நேரத்துக்குள் நடைமுறைப்படுத்துமாறு நான் கூறவில்லை. ஆனால், கோட்டா அதை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போய்த்தான் இவ்வளவு பிரச்சினையும்.

அது தொடர்பில் எனது கருத்துக்களைச் சொல்வதற்கும் அவர் இடம் தரவில்லை. அவரை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரலாற்றில் அவருக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது.” – என்றார்.