குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

Ampara Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Farook Sihan Sep 01, 2024 12:45 PM GMT

கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து இந்த குதிரைகள் தினமும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

எரிபொருள் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் பிரசாரம்

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் செய்து வருகின்றன.

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி | Ataullah Mp Campaigning For Ranil On Horseback

சம்மாந்துறை பகுதியில் இன்று(01) ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பிற்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சி பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

யுக்திய நடவடிக்கையின் போது 702 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் போது 702 பேர் கைது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம்! ரணில்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம்! ரணில்