அஸ்வெசும திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Aswasuma
By Rukshy
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதிபெற்ற பயனாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், விடயத்திற்குப் பொறுப்பான அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு
இந்த பயனாளர்கள் பட்டியல், நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான தகவல் சேகரிப்பின் போது வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் அல்லது பட்டியலில் தங்களது பெயரை இணைக்க வேண்டுமாயின், விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |