இன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்
Sri Lankan rupee
Sri Lanka
Money
Aswasuma
By Rukshy
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாதத் தவணைக்கான பணம் இன்று அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
1,737,141 பயனாளிகளின் கணக்குகளுக்கு 12.63 பில்லியன் பணம் மாற்றப்படும்.
வங்கிக் கணக்குகளில் வைப்பு
குறித்த பயனாளி குடும்பங்களில் வசிக்கும் 70 வயதை கடந்த 580,944 நபர்களுக்காக ரூபாய் பில்லியன் 2.9 மொத்தத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
மேலும், வயது வந்தோருக்கான மாதாந்திர கொடுப்பனவு இந்த மாதத்திலிருந்து ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |