சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பம்

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Jul 21, 2024 07:02 AM GMT
Mayuri

Mayuri

சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அவற்றை ஆராய்ந்த பின்னர் அதற்கான குழுவினால் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பயனாளிகள் தேர்வு

அதன்பின், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே உள்ள ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, அதற்கான நீக்கம் இருந்தால், அவையும் செய்யப்பட்டு, நிவாரணம் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பம் | Aswesuma For Low Income Families

கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் அது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஏனைய மாகாணங்களில் அதிகாரிகள் தரப்பில் சில தயக்கம் காணப்படுவதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW