மூன்று முக்கிய கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhayani Feb 09, 2024 02:46 AM GMT
Dhayani

Dhayani

சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 5,000 ரூபாவாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாவாகவும், 2,000 ரூபாவாக இருந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மூன்று முக்கிய கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் | Aswesuma Allowance In Srilanka People

கொடுப்பனவுத்தொகை

இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியா வெளியிட்ட உளவுத் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியா வெளியிட்ட உளவுத் தகவல்



 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW