ஹொரணை அரச வங்கியில் 3.5 கோடி கொள்ளை: விசாரணைக்காக வந்த இடத்தில் உயர் அதிகாரி கைது

By Dhushi Jun 05, 2026 08:44 AM GMT

ஹொரணை உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற 3.5 கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உதவி முகாமையாளர் ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று(05.06.20260 முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

விசாரணைக்காக வந்த இடத்தில் கைது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

3.5 கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்று(05) காலை அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹொரணை அரச வங்கியில் 3.5 கோடி கொள்ளை: விசாரணைக்காக வந்த இடத்தில் உயர் அதிகாரி கைது | Assistant Manager Security Officer Arrested

ஹொரணை மக்கள் வங்கிக் கிளையில் உள்ள ATM இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த 3.5 கோடி ரூபாய் பணத்தை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை காலை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

வங்கியின் பின்புற வெளியேறும் வாயிலின் ஊடாக பணம் கொண்ட இரண்டு பைகளை எடுத்துச் சென்று போக்குவரத்துக்காக ஏற்றுவதற்கு வங்கி ஊழியர் ஒருவர் முயன்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றக்குழுவிடம் சமர்ப்பிப்பு

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றக்குழுவிடம் சமர்ப்பிப்பு