டயானா கமகேவுக்கு பிணை

Colombo Sri Lanka Diana Gamage
By Rakesh Aug 26, 2025 06:47 PM GMT
Rakesh

Rakesh

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று முன்தினம்(25) கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல டயானா கமகேவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பிணையாளர்களுக்கும் அழைப்பாணை

இது தொடர்பான வழக்கு கடந்த 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.