இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைதாவார் : கனடா அதிரடி
இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நெதன்யாகுவை கைது செய்யத் தயாரா என்று நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, கார்னி "ஆம்" என்று பதிலளித்தார்.
மேலும், காசா மோதல்களின்போது பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்தியது முதலான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெத்தன்யாஹூவை கைது செய்ய கடந்த 2024ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்த கைது ஆணையை பிறப்பித்தது.
கனடாவில் கால் வைத்தால்
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கனடா, சர்வதேச குற்றவியல் அமைப்பின் உறுப்பினர் என்னும் வகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ளது.
பிரதமர் கூறியுள்ள விடயம் மனித உரிமைகள் அமைப்புகளின் பாராட்டைப் பெற்றாலும், தூதரக உறவுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் உருவாகியுள்ளது.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |