கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள் - அர்ச்சுனா எம்பி

Jaffna India Ramanathan Archchuna TVK
By Vinoja May 06, 2026 09:08 AM GMT

கச்சத்தீவை, விஜய் கேட்டார் என்ற போது அதனை தர முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால், நாங்கள் கூறுகின்றோம் கச்சத்தீவை மாத்திரம் அல்ல, முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு எழுதிக் கொடுங்கள். தமிழ் நாட்டு மக்கள் எங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என எம்பி இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள் - அர்ச்சுனா எம்பி | Archuna Mp Said Hand Over Jaffna To Tamil Nadu

பராளுமன்றத்தில் (5) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது அர்ச்சுனா எம்பி மேலும் தெவிக்கையில்,

எமது இதயத்தை கவர்ந்த தமிழ் நாட்டு முதல்வராகவுள்ள விஜய்க்கு அடக்கப்பட்ட தமிழன் என்ற ரீதியில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்த அர்ச்சுனா எம்.பி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.