பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
புதிய இணைப்பு
இந்த வருடத்துக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் ஹரினி அமரசூரியவினால்(Harini Amarasuriya) நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்படி, இந்த வருடத்துக்கான அரச செலவீனம் 4 ஆயிரத்து 218 பில்லியன், 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபாவாகும்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அமைய, ஜனாதிபதி செயல்முறை திட்டத்தின் மீண்டுவரும் செலவீனம் 2 ஆயிரத்து 518 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் மூலதனச் செலவீனம் 354 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்துக்கான பாதீட்டு திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற விவாதம்
பாதீட்டு திட்டம் மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அத்துடன் பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெறவுள்ளது.
பின்னர் குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், மார்ச் 21ஆம் திகதி மாலை 6 மணியளவில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதேவேளை, புதிதாக வேட்பு மனுக்களை பெற்று உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கான விசேட ஏற்பாடுகளுடனான சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(9) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரைவுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இது தொடர்பான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை இடம்பெறும்.
அத்துடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றில் நடைபெறும் விவாதம்
மேலும், இதைத் தொடர்ந்து, மூன்றாம் வாசிப்பு விவாதம் எனப்படும் குழுநிலை விவாதம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நடைபெறும், மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி மாலை திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் வகையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமும் இன்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோர தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |