ரணிலின் மூளைச்சலவையாலேயே அநுர இந்தியா சென்றுள்ளார்: நிமல் சிறிபால டி சில்வா

By Rakesh Feb 08, 2024 11:43 AM GMT
Rakesh

Rakesh

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார், அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்திய தலைவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (08.02.2024) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இந்தியாவின் ஆதிக்கம் குறித்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று இந்தியாவுக்கே சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம்

மேலும் தெரிவிக்கையில், பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது ரணில் விக்ரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம்.

அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களில் மனதில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் வரவேற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW