இலங்கையின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

Anura Kumara Dissanayaka President of Sri lanka Japan Sri Lanka Relationship Japan Presidential Update
By Rakshana MA Jan 07, 2025 01:21 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய்(Hara Shohei) உடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த விடயத்தினை இன்று(07) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வலையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாவது,

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் தெரிவித்துள்ளார்.

வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்

வலுவான நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு : மத்திய வங்கி ஆளுநர்

ஜப்பானின் உதவி 

அத்துடன் ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி | Anura Discussed Future Sl With Japan Ambassador

ஆகவே, கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான், இலங்கைக்கு வழங்கிய உதவி மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஜயிக்கா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் ஹாரா சொஹெய் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டமான "Clean Sri Lanka" திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த சிரேஷ்ட உப தலைவர், அந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்

ஜப்பானுடனான உறவு

இந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நகர தூய்மையாக்கல் பணிகளுக்கு ஜயிக்கா நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி மற்றும் பௌதீக உதவிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஜப்பான் தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி | Anura Discussed Future Sl With Japan Ambassador

இந்த நிலையில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமதா அகியோ, ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி ஒஹாஷி, ஜயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முதன்மைப் பிரதிநிதி டெட்சுயா யமடா, சிரேஷ்ட பிரதிநிதி யூரி இடே உள்ளிட்ட ஜப்பான் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைத்த பொதிகள் மாயம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைத்த பொதிகள் மாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW