நேபாளத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

Anura Kumara Dissanayaka Sri Lanka Nepal
By Dilakshan Sep 13, 2025 11:28 AM GMT
Dilakshan

Dilakshan

நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கிக்கு (Sushila Karki), இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்திலே வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அமைதி மற்றும் ஜனநாயகம் 

அந்தச் செய்தியில் “நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட சுஷிலா கார்க்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


அவரது தலைமை நேபாளத்தை நீடித்த அமைதி மற்றும் ஜனநாயகம் சீரான நிலைக்குத் திரும்புவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தில் கடந்த, செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற பாரிய போராட்டத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் சுஷிலா கார்க்கி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.