நுவரெலியாவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அரச வாகனம்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் அரச வாகனமொன்று, பாழடைந்த இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வாகனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த வாகனமானது நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு உரித்தான கட்டடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார் .
மீட்கப்பட்ட வாகனமானது பல வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக என தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் வாகனத்தின் முன்பக்க இலக்கத்தகட்டைக் காணவில்லை எனவும் பின்பக்க இலக்க தகடு மாத்திரமே உள்ளதாகவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |