அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்
அஸ்வசுமா நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் மீளவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த கால அவகாசத்தை 09.12.2024 வரை நீடிக்க நலப்பலன்கள் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்திட்டம்
இது “உண்மையை பேசுவோம் தகுதியானவர்களுக்கு நன்மையினை வழங்குவோம்” எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும சமூக நலத்திட்டம் ஆகும்.
அத்துடன், நியாயமான காரணங்களின்றி குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஆராய குழு ஒன்றும் நியமனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த குழுவின் மூலம் குறித்த நலத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளை கொண்ட தகுதியான மக்கள் தொடர்பில் உள்ள குறைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒரு மாத கால இடைவெளிக்குள் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |