இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Rukshy Jul 01, 2024 04:12 AM GMT

190,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறித்த ஏல விற்பனை நாளை மறுதினம் (03.07.2024) நடைபெறவுள்ளது.

ஏல விற்பனை 

91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. 

announcement-issued-central-bank-of-sri-lanka

மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW