உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Climate Change
By Rakshana MA Nov 28, 2024 06:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சைகள் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு


முதலாம் இணைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையை மீள நடாத்துவது தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று(27) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஆமலும் தெரிவித்ததாவது, “தற்போதைய காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நான்கு மத ஒற்றுமையுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள பள்ளி வாசல்

நான்கு மத ஒற்றுமையுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள பள்ளி வாசல்

பிற்போடப்படும் பரீட்சைகள்

எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீள் ஆய்வு செய்து, தேவையான தகுந்த நிலைமைகளை அமைத்து, பின்னர் உயர்தரப் பரீட்சையை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். மேலும் இதனை பரீட்சைகள் திணைக்களம் உரிய நேரத்தில் அறிவிக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement For A L Student 2024

இலங்கையை சூழ்ந்து கொண்ட அடை மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நாளை 29ஆம் திகதியுடன் மூன்று நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி 30ம் திகதி பரீட்சை மீள நடத்தப்படும் என்றும், இடைநிறுத்தப்பட்ட மூன்று நாட்கள் தொடர்பான பரீட்சைகள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சீரற்ற காலநிலையால் திருகோணமலையில் இடிந்து விழுந்த கட்டடம்

சீரற்ற காலநிலையால் திருகோணமலையில் இடிந்து விழுந்த கட்டடம்

தரமற்ற மருந்து இறக்குமதி : முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

தரமற்ற மருந்து இறக்குமதி : முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW