இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Mobile Phones
By Rukshy Jan 08, 2025 05:46 AM GMT
Rukshy

Rukshy

வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC)  தெரிவித்துள்ளது.

இதன்படி, தங்களது ஆணைக்குழுவில் IMEI இலக்கத்தைப் பதிவு செய்யாத கைத்தொலைபேசிகளில் குறித்த கால அவகாசத்தின் பின்னர் தொலைபேசி வலையமைப்பு இயங்காது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

ஸ்டார் லிங்க் சேவை

எனினும், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் IMEI இலக்கத்தைப் பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு | Announce Telecommunications Regulatory Commission

இதேவேளை, ஸ்டார் லிங்க் சேவைக்கு உரித்தான தொலைத்தொடர்பு பொதிகளுக்கான கட்டணங்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW