அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும் கௌரவிப்பும்

Sri Lankan Peoples Eastern Province Kalmunai Preschool Children
By Rakshana MA Jan 04, 2025 11:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் தலைவர் எம்.எம். லியாக்கத்துல்லாஹ்வின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுகை விழாவானது நேற்று(03) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த விழாவில் பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.  

சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

மாணவர் விடுகை விழா

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்களால் கௌரவம் வழங்கப்பட்டதுடன் மாவடிப்பள்ளி அல் - மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும் கௌரவிப்பும் | An Noor Pre School Leaving Ceremony Kalmunai

இதில் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி கமு/அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். ரஜாப்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள், மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.ஏ. மனாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றம்

மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery