அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் பொறுப்பேற்பு
அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக(ACLG) நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம் நேற்று(21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் இவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பொறுப்பேற்பு
கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக இவர் கடமையாற்றி வரும் நிலையில், தற்போது அந்த பதவிக்கு மேலதிகமாகவே கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
திறந்த போட்டிப்பரீட்சை மூலம் 2019ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் 2022 ஜனவரி மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |