அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம்

Ampara Eastern Province Kalmunai
By Laksi Jul 27, 2024 08:07 AM GMT

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (26) கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கொள்வதற்கான முனைப்புடன் அம்பாறை மாவட்ட செயற்குழுவுடன் சினேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

கட்சியோடு உத்தியோகபூர்வ இணைவு

இதனையடுத்து, இன்று (27) புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள "புத்தளம் எழுச்சி மாநாட்டில்" வைத்து கட்சியோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் | Alm Salim Joins Ceylon Peoples Congress

இந்தநிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவரும் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளருமான அப்துல் றஷாக் (ஜவாத்), கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான அன்சில், கட்சியின் வெளிநாட்டு விவகரங்களுக்கான பணிப்பாளர் மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை: பொலிஸாரிடம் சிக்கிய கொலையாளிகள்

நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை: பொலிஸாரிடம் சிக்கிய கொலையாளிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW